2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மர்மமான மரணங்கள் தொடர்கின்றன

Nirosh   / 2023 பெப்ரவரி 02 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சில தினங்களுக்கு முன்னர் காணாமல்போயிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வர்த்தகருக்கு சொந்தமான தலங்கமவில் உள்ள சொகுசு வீடொன்றில் இருந்த நீச்சல் தடாகத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

வெல்லம்பிடியைச் சேர்ந்த 49 வயதுடைய ரொஷான் வன்னிநாயக என்கிற செல்வந்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

கடந்த 30ஆம் திகதியிலிருந்து உயிரிழந்த நபரைக் காணவில்லை என நேற்று (01) வெல்லம்பிடிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. 

மர்மமான உயிரிழப்பு தொடர்பில் மரண விசாரணைகளை நீதவான் முன்னெடுத்திருந்ததோடு, நுகேகொட சி.ஐ.டியினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X