Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2023 செப்டெம்பர் 27, புதன்கிழமை
Simrith / 2023 ஜூன் 01 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமீபத்தில் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
விலை சீர்திருத்தத்தினால் பெரும்பாலான மீள்நிரப்பு நிலையங்கள் தமது எரிபொருள் தேவைக்கான முன்பதிவுகளை செய்யவில்லையென சங்கத்தின் துணை செயலாளர் கபில தெரிவித்தார்.
முன்பதிவுகளை செய்யாததால் அவர்கள் தேவையான புதிய எரிபொருள்களைப் பெற்றக் கொள்ளவில்லை. அதனால் இப்போது நாட்டில் தற்போது பெற்றோல் மற்றும் டீசலுக்கான தட்டுப்பாடு தோன்றியுள்ளது. சில பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அண்மையில் வாகனங்கள் வரிசையில் நிற்பதைக் காணமுடிகிறது.
ஆனால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை. தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு சிலரால் உருவாக்கப்பட்டதே, அது இன்று மாலைக்குள் கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் நாளை ஏனைய மாகாணங்களிலும் இயல்பு நிலைக்குத் திரும்பும்" என்று அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago