2021 டிசெம்பர் 04, சனிக்கிழமை

சுஜீகரனை அழைத்தது பயங்கரவாத விசாரணைப் பிரிவு

Nirosh   / 2021 ஒக்டோபர் 17 , பி.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்
 
தமிழ் தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் சுஜீகரன் நிசாந்தனை விசாரணைக்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவு அழைத்துள்ளது.
 
எதிர்வரும் 20ஆம் திகதி விசாரணை ஒன்றிற்கான வாக்குமூலத்தை வழங்க வேண்டுமென கொழும்புக்கு தான் அழைக்கப்பட்டுள்ளதாக சுஜீகரன் நிசாந்தன் கூறியுள்ளார்.
 
மட்டக்களப்பு கல்லடியிலுள்ள தமிழ் கட்சியின் தேசிய அமைப்பாளரின் வீட்டுக்கு இன்று (17) பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் சென்றிருந்த நிலையில், அவர் வீட்டில் இல்லாத காரணத்தினால், அவரின் பெற்றோருடன் 20ஆம் திகதி கொழும்பு 05இல் உள்ள கிருளைப்பனை பேஸ்லைன் வீதியிலுள்ள குறித்த காரியாலயத்துக்கு வருமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X