2023 செப்டெம்பர் 26, செவ்வாய்க்கிழமை

சிறுவனின் உயிரைக் குடித்த “போத்தல்”

Editorial   / 2023 ஜூன் 09 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்ணாடி போத்தலுடன் விளையாடிக்கொண்டிருந்த ஆறு வயதான சிறுவன், விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம், மாலபே தலாஹேன ஹல்பராவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது என்று முல்லேரியாவ பொலிஸார் தெரிவித்தனர்.

அச்சிறுவன், கண்ணாடி போத்தலுடன் கீழே விழுந்துள்ளார். அப்போத்தல் உடைந்து உடம்பில் குத்தியமையால் அதிகளவில் இரத்தம் வெளியேறியுள்ளது.

இதனால் மரணம் சம்பவித்துள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள பொலிஸார் அதிகாரிகள், இல்லையேல் அச்சிறுவன் படுகொலைச் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .