2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

’கப்பலின் பாதிப்பு 20 வருடங்களுக்கு இருக்கும்’

Nirosh   / 2021 ஜூன் 15 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள், இன்னும் 20 வருடங்கள் வரையில் காணப்படுமென தெரிவிக்கும் அமைச்சர் மஹிந்த அமரவீர, இதன் பாதிப்புக்களை டொலர்களில் மதிப்பிட முடியாதெனவும்  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், தீப்பற்றி எரிந்த கப்பலில் இருந்து, கடலில் கலந்த பாரியளவான பிளாஸ்டிக் பொருள்கள் தற்போது 40 கொள்கலன்களில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் அவர், கடலில் இன்னும் எவ்வளவு பிளாஸ்டிக் பொருள்கள் இருக்குமென ஆராய முடியாதெனவும் அவர் தெரிவித்தார்.

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஆயிரத்து 486 கொள்கலன்கள் இருந்ததாகவும்,இது நாட்டின் பிரதான உற்பத்தி நிறுவனங்கள் இரண்டுக்கு, இரு மாதங்கள்  தேவையான  பிளாஸ்டிக் பொருள்கள் இருந்ததாகவும் தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, கப்பல் நிறுவனத்திடமிருந்து நட்டஈட்டைப் பெற வேண்டும்.

அத்தோடு இதற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .