2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

காணி சட்டத்தில் திருத்தம்

Editorial   / 2019 மார்ச் 12 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகேஸ்வரி விஜயனந்தன்

அமெரிக்காவின் மிலேனியம் செலன்ஜ் என்ற நிறுவனத்தால், இலங்கையின் காணி தொடர்பான சட்டத்தில் இரண்டு திருத்தங்கள் கொண்டுவரப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதென, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.  

வரவு செலவுத்திட்டத்தின், இரண்டாம் வாசிப்பு மீதான 6ஆம் நாள் விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

சபையில் தொடர்ந்துரைத்த அவர், இந்த மிலேனியம் செலன்ஜ் நிறுவனத்தின் அலுவலகம் அலரி மாளிகையிலேயே அமைந்துள்ளது. இந்த நிறுவனமானது, இலங்கையில் காணி வங்கி ஒன்றை அமைக்கும் திட்டத்தையும் முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார்.  

இந்த காணி வங்கி ஊடாக, 60 சதவீத இடங்களை தம் வசப்படுத்தும் நடவடிக்கையையே முன்னெடுத்துள்ளனர். மேலும், இந்த அமெரிக்க நிறுவனம் ஊடாக திருகோணமலை துறைமுகத்திலிருந்து, கொழும்பு துறைமுகம் வரை 7 மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில், விசேட பொருளாதாரம் ஒன்றுக்கான வரைபடம் வரையப்பட்டுள்ளதால், இதற்காக மின்சார ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.  

கடந்த 4 வருடங்களில், யோகட், ஐஸ் கிரிம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், கடந்த 4 வருடங்களில் சிறு வர்த்தகர்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளை கைவிட்டுள்ளனர் என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X