2022 நவம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

நாளை முதல் மீரிகம – குருநாகல் இடையே வேகமாக பயணிக்கலாம்

S.Sekar   / 2022 ஜனவரி 14 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீரிகம முதல் குருநாகல் வரையான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் பொது மக்களின் பாவனைக்காக நாளை (15) முதல் திறக்கப்படவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதம மஹிந்த ராஜபக்ச ஆகியோர் இந்த திறப்பு விழாவில் பங்கேற்கவுள்ளனர்.

மீரிகம முதல் குருநாகல் வரையான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் தூரம் 40.91 கிலோமீற்றர்களாகும். சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்து நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த அதிவேக நெடுஞ்சாலை, வெற்றுக் காணிகளினூடாக பெரும்பாலும் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீரிகம, நாகலாகமுவ, தம்பொக்க, குருநாகல் மற்றும் யக்காபிட்டிய ஆகிய பகுதிகளில் வெளியேறும் மற்றும் உட்பிரவேச பகுதிகள் அமைந்துள்ளன.


dailymirror.lk
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X