Freelancer / 2021 ஜூன் 17 , மு.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ் .சதீஸ் கிருஸ்ணா
பொகவந்தலாவை- கொட்டியாகலை கீழ்பிரிவு, மத்திய பிரிவு, மேற்பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் நேற்று (16) கொழுந்து பறிக்கச் சென்ற போதும், அவர்கள் பறித்த கொழுந்தைப் பொறுப்பேற்கவோ, களப் பணிக்குச் செல்லவோ தோட்ட நிர்வாகம் முன்வரவில்லை.
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் அதிகரிப்பு வழங்கப்பட்ட நாள் தொடக்கம், குறித்த தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை நாளொன்றுக்கு 18 கிலோகிராம் கொழுந்தைப் பறிக்குமாறும் வலியுறுத்தியதுடன், வாரத்தில் ஒருநாள் வேலை மாத்திரமே வழங்கப்பட்டதாகவும் தொழிலாளர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.
இந்த நிலையில் இந்த விடயம் தொடர்பில் நேற்று முன்தினம் (15) தோட்ட நிர்வாகத்துடன் கலந்துரையாட வீடமைப்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் கொட்டியாகல தோட்டத்துக்கு வருகைத் தந்த போதிலும், தோட்ட நிர்வாகம் இக்கலந்துரையாடலுக்கு வருகைத் தராததால் தொழிலாளர்களை வழமைப் போல் கடமைகளில் ஈடுபடுமாறு ஜீவன் தொண்டமான் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நிலையில் தொழிலாளர்கள் நேற்று வழமைப்போல் தொழிலுக்கு சமூகமளித்திருந்த நிலையில், தோட்ட உத்தியோகத்தர்கள் எவரும் களப் பணிக்கு செல்லவில்லை என்பதுடன், தொழிலாளர்களால் பறிக்கப்பட்ட கொழுந்தையும் நிர்வாகம் பொறுப்பேற்கவில்லை.
இதனால் தாம் பறித்த கொழுந்துகளை தேயிலை தொழிற்சாலை முன்பாக வைத்துவிட்டு தொழிலாளர்கள் வீடு திரும்பியுள்ளதுடன், தமது பிரச்சினைக்கு சம்பந்தபட்டவர்கள் உரிய தீர்வை வழங்க வேண்டுமென்றும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
M
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago