2021 ஒக்டோபர் 28, வியாழக்கிழமை

பிரதேச சபை தலைவர் கொரோனாவால் பலி

Freelancer   / 2021 செப்டெம்பர் 28 , பி.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றுக்குள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொட்டிகாவத்த முல்லேரியா பிரதேச சபையின் தலைவர் ரங்கஜீவ ஜயசிங்க, இன்று (28) பிற்பகல் உயிரிழந்தார்.

ஏறக்குறைய ஒரு மாதமாக ஐடிஎச் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர், கோமா நிலைக்குச் சென்றதால் கடந்த வாரம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று (28)  பிற்பகல் மரணமடைந்தார்.

ரங்கஜீவ ஜயசிங்க, 2018 ஆம் ஆண்டில் கொட்டிகாவத்த முல்லேரியா பிரதேச சபையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .