2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

பொது போக்குவரத்து இன்மையால் ரூ.68 மில்லியன் இழப்பு

Freelancer   / 2021 ஜூன் 19 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள காரணத்தால் இலங்கை ரயில்வே   மற்றும் இலங்கை போக்குவரத்து சபை இதுவரை 68 மில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது என அதன் தலைவர்கள் கூறுகின்றனர்.

அதன்படி, இலங்கை ரயில்வே துறைக்கு ரூபாய் 450 மில்லியனுக்கும் அதிகமான இழப்பும், இலங்கை போக்குவரத்து சபைக்கு ரூபாய் 320 மில்லியனுக்கும் அதிகமான இழப்பும் ஏற்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபை ஒரு நாளைக்கு 50 மில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை ரயில்வே துறையின் சராசரி தினசரி வருமானம் சுமார் 15 மில்லியன் ரூபாய்  என்றும் கூறப்படுகின்றது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .