2023 செப்டெம்பர் 27, புதன்கிழமை

சிசு செரியவில் 30% பெற்றோர் ஏற்க வேண்டும்

Editorial   / 2023 மே 30 , பி.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை மாணவர்களுக்காக நடத்தப்படும் ”சிசு செரிய” பஸ் சேவைகளை நிறுத்த முடியும் என்று தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்ன, அந்த ​சேவையை கொண்டுநடத்துவதற்கு அரசாங்கம் 70 சதவீதம் அர்ப்பணிக்கிறது. மீதமுள்ள 30 சதவீதத்தை பெற்றோர் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து​கொண்ட ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிசு செரிய பஸ் சேவையை கொண்டு நடத்துவதற்கு நிவாரணம் கிடைக்காவிடின், எரிபொருட்களை வழங்காமல் விடலாம். அத்துடன் அந்த சேவை நின்றுவிடும். அந்த பஸ்களுக்கான கட்டணங்களில் எவ்விதமான மாற்றங்களும் செய்யப்படாது விடின், சேவையை முடக்குவதே ஒரே வழியாகும்.

அத்துடன், அந்த 30சதவீதத்தை கூட அர்பணிக்க முடியாத, ஏழ்மையான பெற்றோர் இருக்கின்றனர். அவர்களின் பிள்ளைகளுக்கு இலவச சேவையை வழங்கவேண்டும். அதுதொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .