2022 மே 18, புதன்கிழமை

கைதி மரணம்: மூன்று அதிகாரிகள் பணிநீக்கம்

Freelancer   / 2022 ஜனவரி 23 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்பிலிப்பிட்டிய, கந்துருகஸ்ஸார திறந்தவெளிச் சிறைச்சாலையில் சிறைதண்டனை அனுபவித்துவந்த லலித் சமிந்த ஹெட்டிகே என்ற கைதியின் மரணம் தொடர்பில் சிறைச்சாலையின் மூன்று அதிகாரிகள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான (நிர்வாகம் மற்றும் புனர்வாழ்வு) சந்தன ஏகநாயக்க, இன்று (23) தெரிவித்தார்.

குறித்த சிறைச்சாலைக்குப் பொறுப்பான சிறைச்சாலை அதிகாரி, காவலர் மற்றும் சார்ஜன்ட் ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை முடியும் வரை இந்த மூன்று அதிகாரிகளின் பணி இடைநிறுத்தம் அமுலில் இருக்கும் எனவும் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

உயிரிழந்த கைதியின் மகளை தொலைபேசியில் அழைத்து மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டின் பேரில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், கைதியின் மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஏகநாயக்க தெரிவித்தார்.

சிறைச்சாலை அதிகாரிகளால் கைதி அடித்துக் கொல்லப்பட்டதாக உறவினர்கள் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவின் உதவி அத்தியட்சகரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .