2021 ஓகஸ்ட் 01, ஞாயிற்றுக்கிழமை

‘இது சதியா, விதியா? எனக் கூறமுடியாது’

Ilango Bharathy   / 2021 ஜூன் 21 , மு.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா மரணங்கள் குறித்த தவறான அறிக்கையே, தொற்று நோய்ப் பிரிவின் பிரதானி சுதத் சமரவீரவின் இடமாற்றத்துக்கு காரணமென, சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

தொற்று நோய்ப் பிரிவின் பிரதானி சுதத் சமரவீர, டெங்கு நோய் பிரிவுக்கு திடீரென
இடமாற்றப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், 101 கொரோனா மரணங்கள் ஒரே நாளில் பதிவாகியதாக தெரிவிக்கப்படும் விடயத்தை ஆரோய்ந்த போது, ஜனவரி, பெப்ரவரி மாதம் பதிவான மரணங்களையும் சேர்த்து ஒரே நாளில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையை அடிப்படையாக வைத்தே அரசாங்கமும் சுகாதார தரப்பும் சில தீர்மானங்களை எடுக்கின்றன. எனவே, சரியான தகவல்களை வழங்கும் பொறுப்பிலிருந்து விலகியமை பாரிய குற்றமாகும் என்றார்.

இது சதியெனக் கூறப்படுகின்றதே என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,
“இது சதியா அல்லது விதியா எனக் கூறமுடியாது. ஏனெனில், நாட்டை தவறாக வழிநடத்தும்
செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது” என்றார்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம்
ஊடகவியலாளர்கள் வினவிய போது, சிரித்தவாறே பதில் எதுவும் கூறாமல் தனது வாகனத்தில்
ஏறிச் சென்றுவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .