2021 ஜூலை 27, செவ்வாய்க்கிழமை

வான் மோதியதில் பாதசாரி மரணம்

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 29 , மு.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டாரகம, கல்துடே என்னுமிடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை, வானொன்று பாதசாரியை முட்டி மோதியதில் அவர், மரணமடைந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியில் சென்றுக்கொண்டிருந்த பெண்ணை, முட்டி மோதிய அந்த வான், மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகி வீடொன்றையும் உடைத்துக்கொண்டு சென்றுள்ளது. இந்த சம்பவத்தில் வானில் பயணித்த இருவரும் காயமடைந்துள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த பாதசாரியான பெண், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .