2021 செப்டெம்பர் 21, செவ்வாய்க்கிழமை

2030 இலக்கை நோக்கி நகர்வதற்கு உப-குழுவை நியமிக்க அங்கிகாரம்

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 12 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட இலங்கைக்கு உரிய 2030 நிலையான அபிவிருத்தியின் நோக்கை வெற்றியடையச் செய்வதற்கு அமைச்சரவை உப-குழுவை நியமிப்பதற்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அமைச்சரவைப் பத்திரத்துக்கே, அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது.  

இந்த உப-குழுவில், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் மாகாண முதலமைச்சர்கள் ஆகியோரும் அடங்குகின்றனர். அத்துடன், இந்த வெற்றிக்காக நிபுணர் குழுவொன்றையும் நியமிப்பதற்கு அங்கிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.  

அதனடிப்படையில், நிலைய அபிவிருத்தி தொடர்பிலான அமைச்சரவை உப-குழுவானது மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை கூடவிருக்கின்றது. அபிவிருத்தி மூலோபாயம், முன்னேற்ற மதிப்பு ஆகியவற்றை செய்யும் இக்குழுவானது அதற்கு தேவையான பரிந்துரைகளை அரசாங்கத்துக்கு முன்வைக்கும்.  

அமைச்சரவை உப-குழுவுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்காக, ஜனாதிபதியின் செயலாளரினால், ஒருங்கிணைப்பாளர் ஒருவரும் நியமிக்கப்படவிருக்கின்றார். 2030ஆம் ஆண்டளவில் இலங்கை அடையக்கூடிய அபிவிருத்தி மட்டத்தின் முன்னுரிமையை அறிந்துகொள்ளல், அவ்வாறு அறிந்துகொண்டமைக்கான இலக்கை நோக்கி முன்னகர்தல், அதற்கான காலவரையறையை தயாரித்தல், அந்த இலக்கை அடைவதற்காக அரசாங்க, அரசசார்பற்ற மற்றும் சிவில் அமைப்புகளின் பங்கை உணர்தல் ஆகியனவற்றை அமைச்சரவை உப-குழுவானது மதிப்புரை செய்யவிருக்கின்றது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .