2021 ஜூலை 31, சனிக்கிழமை

ஆர்ப்பாட்ட பேரணிகளால் கொழும்பில் பாரிய போக்குவரத்து நெரிசல்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 08 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு ஹோர்டன் பிளேஸ் மற்றும் அலெக்சாண்டர் சுற்றுவட்ட பகுதிகளில் பெருமளவிலான வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.  அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் இன்று காலை ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள.

அரசியலமைப்பின் 18ஆவது திருத்தத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வாவினாலும் குறித்த அரசியலமைப்பு திருத்தத்துக்கு எதிராக எதிர்கட்சியின் மாகாணசபை உறுப்பினர் ஸ்ரீலால் லக்திலக்கவினாலும் இந்த ஆர்ப்பாட்டப் பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .