2021 ஒக்டோபர் 22, வெள்ளிக்கிழமை

இசைதுறை மிகவும் சவால்மிக்கது: அருந்ததி ஸ்ரீரங்கநாதன்

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 29 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

''இசைதுறையானது மிகவும் சவால்மிக்க துறையாகும். ஒருவர் பாடிய பாடல்களையே தொடர்ந்து இசை மேடைகளில், இசை கச்சேரிகளில் பாடிக்கொண்டிருந்தால் அது இசையை ரசித்துக் கேட்பவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்திவிடும். புதிய புதிய கோணங்களில், வெவ்வேறான சிந்தனையலைகளில், புதிய முயற்சிகளை இசைத்துறையில் உட்புகுத்திக்கொண்டேயிருக்க வேண்டும். எந்தத் துறையை நாம் தேர்ந்தெடுத்தாலும் எவ்வாறானதொரு சந்தர்ப்பத்தையும் நாம் எதிர்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் விட எந்த ஒரு கலைஞனுக்கும் பணிவு என்ற பண்பு மிகவும் முக்கியமானது. அந்தப் பணிவே எம்மை எல்லோரது மனங்களிலும் இடம் பிடிக்கச் செய்கின்றது'' என்கிறார் இயல், இசை, நடனம், ஒலிபரப்பு என்ற நான்கு துறைகளிலும் கால்பதித்து தமக்கான ஓர் இடத்தை எல்லோரது மனதிலும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இலங்கையின் இசைக்குயில் அருந்ததி ஸ்ரீரங்கநாதன்.

இவர் இளம் வயதிலே இந் நான்கு துறைகளையும் தேர்ந்தெடுத்து படிப்படியாக வளர்ச்சிகண்டு, இன்று எம்முன் நல்ல பாடகியாக, சிறந்த ஒலிபரப்பாளராக , வீணை ஆசிரியராக, நடன நிகழ்ச்சிகளின் ஒழுங்கமைப்பாளராக வளர்ந்து நிற்கின்றார். வானொலிக்கான குரல் தேர்வின்போது கர்நாடக வாய்ப்பாட்டு, கர்நாடக வீணை, மெல்லிசை, பன்னிசை என்ற நான்கு துறைகளிலும் ஒரேதரத்தில் சித்தியெய்திய பெண் கலைஞர் என்ற பெருமை இவர் ஒருவரை சாரும்.

பல்கலைகழக பட்டப்படிப்பில் ஈடுப்படும்போதே ஒலிபரப்புத் துறையினுள் நுழைந்த இவர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் 29 வருடங்கள் கடமையாற்றியுள்ளார். சாதாரணமான தமிழ்மொழியின் அறிவுடனும், வாசிக்கத் தெரியும் என்ற எண்ணத்துடனும் அறிவிப்பு செய்யமுடியாது. அறிவிப்பு என்பதும் கூட ஒருவகை கற்றல் முறை என்பது இவர் அறிவிப்புத்துறை குறித்து கொண்டிருக்கும் எண்ணக்கருக்களில் ஒன்று.

நடனம், அறிவிப்பு என்ற இரண்டு துறைகளிலும் நாட்டம் கொண்டிருந்தாலும், இவர் நல்ல பாடகியாகவே பலராலும் அறியப்பட்டுக்கொண்டு இருக்கின்றார். இதுவரை 20, 25இற்கு மேற்பட்ட மெல்லிசைப் பாடல்களை பாடியுள்ளார். அதேவேளை 20 நாட்டிய நாடகங்களுக்கு இசையமைத்துள்ளதுடன் 300இற்கும் மேற்பட்ட பரதநாட்டிய அரங்கேற்றத்திற்கு பாடல்களை பாடியுள்ளார். இவர் இசையமைத்த பாடல்கள், பாடிய மெல்லிசைப் பாடல்கள் அனைத்துமே இறுவெட்டாக தனது பிள்ளைகளால் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவை வெகுவிரைவில் வெளியிடப்படவுள்ளன.

கலாசூரி வகுப்பு-1 (1989), விஷ்வப்பிரசாதினி (1989), Oxford பல்கலைகழகத்தால் AWARD OF EXCELANCI, THE ONDA சர்வதேச நிறுவனத்தால் சாதனைப்பெண் (1989), சங்கீத கலாநிதி, சார்க் அமைப்பினால் சாதனை பெண் போன்ற விருதுகளும் பட்டங்களும் இவரது சாதனைகளுக்காக கிடைத்த அங்கிகாரங்களாகும். இந்த பட்டியல் இன்னும் நீளுகின்றது.

இசை, நடனம் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தமிழ்மிரர் கலைஞர்களின் நேர்காணல் பகுதியில் எம்மோடு பகிர்ந்துகொண்டார். அவரது முழு கருத்துக்களையும் காணொளியில் காணலாம்.


  Comments - 0

 • Thilak Monday, 01 November 2010 07:47 PM

  பல்லைக்கழகத்தல் படிக்கும் காலத்தில் நடனவகுப்புகளுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் இசைத்துறையை மாத்திரம் அருந்ததி ஸ்ரீரங்கநாதன் தெரிவு செய்தமை இசைத்துறையில் மீதான அவரின் ஈடுபாட்டை காட்டுகிறது. அதேவேளை பின்னர் அவர் நடனப் பயிற்சிகளையும் மேற்கொண்டமை விடாமுயற்சியிருந்தால் விரும்பிய எதையும் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது.
  சிறந்த பேட்டி. பேட்டிகண்டவருக்கும் தமிழ் மிரருக்கும் பாராட்டுக்கள்.

  Reply : 0       0

  naushard Thursday, 20 January 2011 07:35 PM

  It was a great opportunity for me to work under Mr. Sri Ranganathan at SLBC Tamil Service, and I have learnt a lot from her; she is very smart in her operation.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X