Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 மார்ச் 24 , பி.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் அபிவிருத்தியை ஊக்குவிப்பதற்கும் அரசியல் தீர்வை காண்பதற்குமான ஒரே வழி இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதே என நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் விசேட சமாதானத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் கூறியுள்ளார்.
இலங்கை அரசாங்கத்திற்கும் புலம்பெயர்ந்த சமூகங்களுக்கும் இடையில், பேச்சுவார்த்தைப் பங்காளராக செயற்படுவதற்கு தான் தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.
புலம்பெயர்ந்த தமிழ் மக்களை கடந்த 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சந்தித்து பேசியபோது எரிக் சொல்ஹெய்ம் இவ்வாறு கூறியுள்ளதாக நோர்வே நியூஸ் தெரிவித்துள்ளது.
பல அமைப்புகள் இச்சந்திப்பில் பங்குபற்றியதாகவும் நோர்வே நியூஸ் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கை தொடர்பான நோர்வேயின் கொள்கை குறித்து அறிவதற்காகவும் தற்போதைய நிலைமை குறித்த தமது அவதானிப்புகளை வெளிப்படுத்தவும் இச்சந்திப்பை மேற்படி தமிழ் அமைப்புகள் கோரியிருந்தன.
தமிழ் குழுக்கள் கூறுவதை செவிமடுப்பது சொல்ஹெய்ம் பிரதான கவனம் செலுத்திய விடயமாக இருந்தது. இலங்கையில் அபிவிருத்தியை ஊக்குவிப்பதற்கும் அரசியல் தீர்வை காண்பதற்குமான ஒரே வழி இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதே என் சொல்ஹெய்ம் அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
இலங்கை அரசாங்கத்திற்கும் புலம்பெயர்ந்த சமூகங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில், பேச்சுவார்த்தைப் பங்காளராக செயற்படுவதற்கு தான் தயார் எனவும் அவர் கூறினார். எனினும் நெடியவன் குழுவினர் இந்த யோசனையை நிராகரித்தனர்.
8 minute ago
30 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
30 minute ago
37 minute ago