Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஏப்ரல் 07 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிலர் மீண்டும் பயங்கரவாத செயற்பாடுகளில் சம்பந்தப்பட்டதாக கிடைத்த தகவல்களையடுத்து அவர்கள் அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் டி.எம்.ஜயரட்ன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை அவர் குறிப்பிடவில்லை. நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றஅவசரகாலச் சட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இதனைக் கூறினார்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட 6000 விடுதலைப் புலி உறுப்பினர்கள் அவர்களின் குடும்பத்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இத்திட்டம் இவ் வருடத்திற்குள் முடிவடையும் என பிரதமர் தெரிவித்தார். 'கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 313 விடுதலைப் புலி உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டனர்.
அவர்கள் சமூகத்தில் முறையான வகையில் இணைந்து செயற்படுவதை உறுதிப்படுத்துவதற்காக பாதுகாப்புப் படையினர் அவரகளை உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.
70 வீதமானோருக்கான புனர்வாழ்வு நடவடிக்கையை நாங்கள் பூர்த்தி செய்துள்ளோம். இவ்வருட இறுதிக்குள் ஏனையோருக்கான புனர்வாழ்வு நடவடிக்கை பூர்த்தியாகும்' எனவும் அவர் தெரிவித்தார்.
16 minute ago
19 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
19 minute ago
37 minute ago