Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 மார்ச் 29 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொலன்னாவையில் அமைந்துள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சேமிப்பு முனைத்துக்கு முன்னால் திங்கட்கிழமை (27) சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நேற்று (28) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கூட்டுத்தாபனத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்க உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து மேற்குறிப்பிட்ட போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு, எரிபொருள் விநியோகத்தை சீர்குலைக்க முயற்சித்ததாக தெரிவிக்கப்படும் தொழிற்சங்க அதிகாரிகளை கட்டாய விடுமுறையில் அனுப்பியுள்ளதாக இலங்கை பெற்றோலியகூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் முதல் நீண்ட விடுமுறை நாட்கள் ஆரம்பமாகவுள்ள நிலையில், முன்னதாகவே இந்த அதிகாரிகள் கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1) நாடளாவிய ரீதியில் வரிசையில் காத்திருக்கின்றனர்.
2) இராணுவத்தை கொண்டு எரிபொருள் விநியோகிக்கப்படுகின்றது.
3) இந்திய பணியாளர்களை கொண்டுவருமாறு சிங்கள சமூக வலைத்தளங்களில் ஆலோசனை
4) போராட்டம் தொடரும் என்ற அச்சத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வாகன சாரதிகள் வரிசையில் நிற்கின்றனர்.
5) இன்று காலைவேளையில் சுமார் 13,200 லீற்றர் பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகிக்கப்பட்டுள்ளன என அமைச்சு அறிவித்துள்ளது.
6) எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது.
7) கொழும்பில் பல வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இந்நிலையில், கடமைக்கு சமூகமளிக்க தவறிய தொழிற்சங்க தலைவர்கள் உட்பட 20 இற்கும் மேற்பட்ட சிலோன் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் இன்று கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டனர் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
5 minute ago
3 hours ago
18 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
3 hours ago
18 Oct 2025