Editorial / 2021 டிசெம்பர் 27 , மு.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான மக்கள் குறைந்த பட்சம் ஒரு வேளை உணவையாவது சாப்பிட முடியுமா என்ற கவலையில் இன்று உள்ளனர் எனத் தெரிவித்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி, தேசத்தின் வீழ்ச்சியை அரசாங்கத்தால் தடுக்க முடியாது என்றார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) காலியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி குறித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தனர். தற்போது ஏமாற்றமடைந்துள்ள மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.
மேலும், கிராமப்புறங்களில் உள்ள மக்கள் ஒரு வேளை உணவைக் கூட வாங்க முடியாத சூழலில் அரசாங்கம் மக்களை இரண்டு வேளை உணவை உண்பதை ஊக்குவித்துள்ளதாகவும், சில அமைச்சர்கள் தமது சொந்த உணவை வீட்டிலேயே பயிரிடுமாறு மக்களை ஊக்குவிப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் வீரக்கொடி மேலும் தெரிவித்தார்.
உர நெருக்கடியால் உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதைக் காண அரசாங்கத்துக்கு நிபுணர்களின் ஆலோசனை தேவையில்லையென சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர், நடைமுறை வேலைத்திட்டத்தை விரைவில் அமுல்படுத்தாவிடின் தேசத்தின் வீழ்ச்சியை அரசாங்கத்தால் தடுக்க முடியாது என்றார்.

16 minute ago
26 minute ago
39 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
26 minute ago
39 minute ago
2 hours ago