2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பார்த்து கொண்டிருக்கும் போதே பலரும் செத்து மடிவர் : ஒரு நாளைக்கு 200 பேர் மரணிப்பர்

Editorial   / 2021 ஓகஸ்ட் 09 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்னும் சில நாள்களில் நாட்டில் அன்றாடம் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5,000 ஐ கடக்கும். அத்துடன், நாளொன்றுக்கு இடம்பெறும் மரண எண்ணிக்கை ஆகக் குறைந்தது 200 ஆக இருக்கும் என்றும் வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடு, தற்போது முகங்கொடுத்து கொண்டிருக்கும் நிலைமை, இன்னும் இரண்டொரு வாரங்களில் பன்மடங்குகளால் அதிகரித்து இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலைகளில் ஏற்பட்டிருக்கும் இடநெருக்கடி, அதனால் ஏனைய தொற்றாளர்கள் வைத்தியசாலைக்குச் செல்வதற்கு அச்சம் ​கொள்கின்ற​னர். இதன் காரணமாக, கொரோனா தொற்றாளர்களின் மரண வீதம் அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

வைத்தியசாலைகளில் போதுமான அளவுக்கு ஒட்சிசன் தற்போது இருந்தாலும், இன்னும் ஓரிரு வாரங்களில் ஏற்படும் ஒட்சிசன் பற்றாக்குறை காரணமாக, பார்த்துகொண்டிருக்கும் போதே நோயாளர்கள் மரணிக்கக்கூடும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

பயணக்கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை எனில் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது: அது மிக பயங்கரமானதாக இருக்கும் என ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுனேத் அகம்பொடி தெரிவித்துள்ளார்.

“வைத்தியசாலை பணியாளர்கள், தொற்றுக்கு இலக்காகி இருக்கின்றமை இன்னும் பயங்கரமானது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X