2021 டிசெம்பர் 03, வெள்ளிக்கிழமை

‘சரியான நேரத்தில் வெளியில் இறக்குவேன்’

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 05 , மு.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சரியான நேரம் வரும்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தனியாக போட்டியிடும். அவ்வாறு போட்டியிட்டு ஆட்சியையும் கைப்பற்றும் என முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன, நம்பிக்கை வெளியிட்டார்.

புத்தளத்தில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடலுக்குப் பின்னரே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் எவையும் இடம்பெறவில்லை எனத் தெரிவித்த அவர், ஆகையால் மக்கள் மனவேதனையுடன் வேண்டா வெறுப்பாக இருக்கின்றனர் என்றார்.

விழுந்துகிடக்கும் மிகவும் பலமான சக்தியொன்று மிகவிரைவில் எழுந்து நிற்கும் எனத் தெரிவித்த அவர், கட்சியின் அமைப்பை பலப்படுத்தினால் அச்சக்தியை எழுப்பி நிற்கச்செய்வது அவ்வளவு கடினமான காரியமல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X