2023 ஜூன் 07, புதன்கிழமை

பாக்குநீரிணையைக் கடந்து சாதனை!

Editorial   / 2018 மார்ச் 25 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தலைமன்னாரில் இருந்து இந்தியாவில் உள்ள தனுஷ்கோடி வரை கடலில் நீந்தி சென்று இந்தியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் சாதனைப்படைத்துள்ளார்.

சென்னையை சேர்ந்த 20 வயதுடைய, ராஜேஷ்வர் பிரபு என்ற இளைஞரே இச்சாதனையை நிலைநாட்டியுள்ளார். இவர் 11  மணித்தியாலங்கள் 55 நிமிடங்களில் கடலில் நீந்தி சாதனைப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளினதும் அனுமதியை பெற்று இலங்கைக்குப் படகின் மூலம், 23 ​ஆம் திகதி வரு​கை தந்த ராஜேஷ்வர், 24 ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் தலைமன்னாரில் வைத்து கடலில் நீந்த தொடங்கி, பிற்பகல் 2.55 மணியளவில், இந்தியாவின் தனுஷ்கோடியை அடைந்துள்ளார்.  

இதுவரையிலும் பாக்குநீரிணையை கடந்தவர்களின் சாதனைகளை முறியடித்து, ராஜேஷ்வர் சாதனைப் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .