2021 ஒக்டோபர் 21, வியாழக்கிழமை

‘கடலில்தான் சீற்றமும் அவதாரம் எடுக்கிறது’

Editorial   / 2018 ஜூலை 05 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடல், விடை காண முடியாத விடயங்கள் நிரம்பிய இடம். பலகோடி ஆண்டுகளுக்கு முன்னரே, உயிரினங்களை உருவாக்கிய பெரும் பிரதேசம். 

ஓரறிவு உயிரினங்கள் தோன்றி, பின்பு மனித இனத்தின் பரிணாம வளர்ச்சிகள், இங்கு வாழ்ந்த உயிரினங்கள் ஊடாகவே, பூமித்தரையில் மனிதனும் புது இனமானான். 

புவனத்தின் சகல பகுதிகளிலும் சிற்றுயிர், தாவரங்கள், செடி, கொடி, மிருகம், ஊர்வன, பறப்பன என அனைத்தும் தோன்றிடக் காரணமானது இந்தக் கடல்தான். 

மனிதனுக்கு மூத்த குலம் கூட, ஓரறிவு உயிரினம் என விஞ்ஞானம் சொல்கிறது. மனித பரிணாம வளர்ச்சியை, மெஞ்ஞானமும் என்றோ சொல்லிவிட்டது. 

மனித வேட்டையால், ஜீவன்கள் பலகோடி சமாதியடைந்து விட்டன. ஆனால், இன்னமும் கூட, இவைகள்தான் புவனத்தைக் காப்பாற்றி வருகின்றன. நாங்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றோம்? கடல் வளத்தைக் குற்றுயிராக்கி வருகின்றோம். கடலில் மாசு சூழ்ந்தால் பூமிக்கு அழிவு. கடலில்தான் சீற்றமும் அவதாரம் எடுக்கிறது.

வாழ்வியல் தரிசனம் 05/07/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X