2022 ஜூலை 07, வியாழக்கிழமை

‘எதிலும் ஆசை கொண்டால், மனம் சிதையும்’

Editorial   / 2018 ஒக்டோபர் 16 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசைப்படுவதும் ஆசைகளை உதறுவதும் எங்ஙனம் சாத்தியமாகும்? இரண்டுமே ஒன்றுக்கொன்று, முரண்பாடாகத் தோன்றும். ஆசை நிறைவேறியதால் கிடைத்த தற்காலிக மனத்திருப்தி, ஆசை நிறைவேறாததால் ஏற்படும் மனச்சோர்வு, மனச்சிதைவு எனப் பல எண்ணவோட்டங்கள் மாந்தர்களை வாட்டி வதைக்கின்றன.

எனினும், ஆசைப்படாமல் இருந்தால், இந்த வாழ்வில் எந்தவிதமான கடமைகளையும் எம்மால்  செய்துவிட முடியாது; ஜடம் போலத்தான் வாழவேண்டி இருக்கும். கல்வி கற்க, பணம் சம்பாதிக்க எனப் பல நல்ல காரியங்களுக்கு, ஆசையின் உதவி தேவைப்படுகின்றது.

இரசனையுடன் கொண்டாட்டம், உறவினர்களுடன் பரஸ்பரம் இரசித்து வாழ வசதி, அந்தஸ்து இல்லாமல் எதுவுமே நடக்காது. ஆனால், எமது வலுவை நிரூபிக்க, முறையற்ற விதத்தில் பேராசை கொள்வது, அடுக்காத செயல். எதிலும் ஆசை கொண்டால், மனம் சிதையும். பராயம் கூடக்கூட மனம் விசாலிக்க வேண்டும். படிப்படியாக ஆசைகளை ஒழித்து, சுதந்திர புருஷராகுதலே சிறப்பு.

   வாழ்வியல் தரிசனம் 16/10/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .