Editorial / 2018 செப்டெம்பர் 17 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பட்டதாரியான அவன் நேர்முகப் பரீட்சைக்கு, கொழும்புக்கு வந்தான். அவனுக்கு ஏராளமான உறவினர், நண்பர்கள் இருப்பினும் தனது இளமக்காலத் தோழன் வீட்டுக்குச் சென்றுதான் தங்கவேண்டும் என முடிவுசெய்து, ஒருவாறு முகவரியைத் தெரிந்துகொண்டு, அவன் வீட்டுக் கதவைத் தட்டினான்.
வீடு மிகவும் சிறியது; அரசாங்கத்தின் வீட்டுத் திட்டத்தில் அமைந்திருந்தது. வீட்டிலிருந்து வௌயே வந்த நண்பன், “அடேய் நீயா, வாவா, என்னை மறந்தே விட்டாயா” எனக் கேட்க, “ஏன் நீ மட்டும் என்னவாம்” எனக் கேட்டுத் இருவரும் தழுவிக் கொண்டார்கள்.
அவர்களின் வறுமை நிலை அங்கே தெரிந்தது. ஆனால், துப்பரவாக, அழகாக வீட்டை வைத்திருந்தார்கள். தங்கச்சி என்ற குரல் கேட்டு, வௌயே வந்தவளைப் பார்த்து மலைத்துப் போய் விட்டான்.
“உங்கள் வீட்டில் யார், யார் இருக்கின்றீர்கள்” என்றதும் “அம்மா, அப்பா, தங்கச்சி, தம்பி” என்றான். தொடர்ந்து அவன் “நான் ஓட்டோ ஓட்டி வருகின்றேன்” என்றான்.
தனது பழைய அன்புச் சினேகிதனின் பசுமையான இனிய நினைவுகள் அவனை அழைத்தன. என் உயிர்த் தோழன் இவன். எனக்காக எதுவும் செய்வான். சின்ன வயதின் குறும்புகள், திருட்டு மாங்காய் அடிப்பது என போகிற இடங்களில் விட்டுப் பிரிந்ததே இல்லை. இப்படி, கஸ்டப்பட்டு இருக்கிறானே, நான் ஏதாவது செய்ய வேண்டும். அந்த நொடியில் அவன் தங்கை தேநீருடன் வந்தாள். “எடுங்கள்” என்றவள் வீட்டுக்குள் சென்றுவிட்டாள்.
“என்ன யோசனை” என நண்பன் கேட்டான். எனது நண்பனுக்கு ஏதாவது செய்தாக வேண்டும். இவளை என் சொந்தமாக்கி விடுகின்றேன். அவன் தீர்மானம் எடுத்துவிட்டான்.
வாழ்வியல் தரிசனம் 17/09/2018
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago