2025 ஜூலை 19, சனிக்கிழமை

‘மனம் கனத்தது’

Editorial   / 2018 செப்டெம்பர் 20 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலாபூஷணம் விருது வழங்கும் விழாவைப் பார்த்துவிட்டு வீட்டுக்குச் செல்வதற்காக, பஸ் தரிப்பு நிலையத்துக்கு வந்தேன். சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர், சின்னப் பையனுடன் நின்றுகொண்டிருந்தார். 

மிகவும் பலவீனமான தோற்றத்துடன், கைகள் நடுங்கியபடி காணப்பட்டார். அவருக்கு வழங்கப்பட்ட பதக்கம், கழுத்தில் மினுமினுத்தது. தனக்கு வழங்கப்பட்ட சான்றிதழைக்கூட, நழுவவிடும் நிலையிலேயே பிடித்திருந்தார். அவருடன் பேசியபோது, அவர் சகோதர இனத்தைச் சேர்ந்த கலைஞர் என்பதைப் புரிந்துகொண்டேன். 

அவிசாவளைக்குப் போவதாகச் சொன்னார். “சாப்பிட்டீர்களா”? என்று கேட்க, “ஆமாம், மண்டபத்தில் தந்தார்கள்” என்றார். அங்கு நிற்கும்போது, மணி எட்டு இருக்கும். அவர், இரவு உணவு உண்டாரா என்பது எனக்குத் தெரியாது. எத்தனை இலட்சம் கலா இரசிகர்களைக் கண்டிருப்பார். ஒருவராவது அவருக்குத் துணையாக வரவில்லையே? ஒன்றுமறியாத சிறுவனுடன் வந்திருந்தார். 

ஒருபடியாக பஸ் வந்தது. அவரை ஏற்றிவிட்டேன். இன்றைய, முதிய கலைஞர்கள் அநேகரின் நிலை இதுதான். மனம் கனத்தது.

வாழ்வியல் தரிசனம் 20/09/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X