2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

ஒரே நேரத்தில் 260 டீசேர்ட்களை அணிந்து சாதனை

Editorial   / 2019 மார்ச் 15 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது பிள்ளைகளின் கோரிக்கையை நிறைவேற்றி வைப்பதற்காக தந்தையொருவர், ஒரேநேரத்தில் 260 டீசேர்ட்களை அணிந்து, புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

கனடா, ஒன்டாரியோவைச் சேர்ந்த டெட் ஹெஸ்டிங் என்ற நபரே, இவ்வாறான புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

டெட்டின் இரு பிள்ளைகளான எவ்ரி (வயது14), வில்லியம் வயது (11) ஆகிய இருவரும், அவரை அழைத்து, அவரதுப் பெயரை இந்த உலகமே அறிந்துகொள்ளும் வகையில், சாதனையொன்று நிலைநாட்டிக் காட்டுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக குறித்த நபர்,  அதற்கான  முயற்சியில் இறங்கியுள்ளார்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட 100 சாதனைகளை ஆராய்ந்துள்ளதுடன்,  ஒரே நாளில் அதிகளவான டீசேர்ட்களை அணிந்து ஏற்கெனவே சாதனை புரிந்த நபரின் சாதனையை முறியடிப்பதற்குத் தீர்மானித்தார்.

இவ்விடயம் தொடர்பில், கின்னஸ் உலக சாதனை நிறுவனத்துக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கின்னஸ் உலக சாதனை நிறுவனத்தின் அதிகாரிகளின் முன்னிலையில், ஒரே நாளில் 260 டீசேர்ட்களை அணிந்து சாதனைப் படைத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .