2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

கிராமிய இரசனையை கொண்ட செர்னிட்டி விலேஜ்

Super User   / 2013 ஒக்டோபர் 28 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-றிப்தி அலி

கொழும்பு என்றாலே சன நெரிசல் மிக்க நகர். அந்த நகரில் ஒரு நிமிடம் கூட ஓய்வு எடுக்க நேரமில்லை என்றே பொதுமக்கள் கூறுவர். அந்தளவிற்கு 24 மணி நேரமும் பரபரப்பான நகராக கொழும்பு காணப்படுகின்றது.  இந்த கொழும்பு நகரை போன்றே கொழும்பு மாவட்டத்திலுள்ள தெஹிவளை, ஹோமாகம மற்றும் அவிசாவளை உட்பட ஏனைய அனைத்து நகரங்களும் சன நெரிசல் மிக்க பரபரப்பான நகராக காணப்படுகின்றன.

இதனால் இந்த மாவட்டத்தில் ஓய்வெடுப்பதற்கு சிறந்த இடமொன்றில்லை என்கின்றனர். இதன் காரணமாக கொழும்பிலுள்ளவர்கள் தங்களது விடுமுறையை கழிப்பதற்காக பல ரூபாய் பணத்தையும் பல மணி நேரங்களையும் செலவளித்து வெளி இடங்களுக்கு செல்கின்றனர்.

இது முற்றிலும் தவறான செயற்பாடாகும். இதற்கு காரணம் என்னவென்றால் கொழும்பிலும் ஓய்வெடுப்பதற்கு சிறந்த இடங்கள் உள்ளமையாகும். அவ்வாறான ஒரு இடமே செர்னிட்டி விலேஜ் ஆகும். கொழும்பு மாநகரிலிருந்து சுமார் ஒரு மணித்தியால பிராயண தூரத்தினை கொண்ட இந்த விலேஜ் - கொழும்பு, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மூன்று மாவட்டங்களையும் இணைக்கும் பிரதேசத்தில் உள்ளது.

அதாவது குறித்த மூன்று மாவட்டங்களின் எல்லை பிரதேசமான கலதுவாவ எனும் கிராமத்திலேயே இது அமைந்துள்ளது. அதாவது கொழும்பிலிருந்து சுமார் 48 கிலோ மீற்றர் தூரத்தில் ஹைலெவேல் வீதியிலிருந்து இங்கிரிய நகரிற்கு செல்லும் பிரதான வீதியின் உட்பகுதியிலேயே இந்த விலேஜ் உள்ளது.

இயற்கையான மலைகள் மற்றும் காடுகளுக்கு மத்தியிலேயே இந்த செர்னிட்டி விலேஜ் அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. சுமார் 30 ஏக்கர் காணியில் தேயிலை, இறப்பர் தோட்டங்கள் மற்றும் மரக்கறி தோட்டம் ஆகியவற்று மத்தியிலேயே இந்த செர்னிட்டி விலேஜ் அமையப்பெற்றுள்ளது.

மலைகளை குடைந்து இயற்கையான வடிவில் இந்த ஹோட்டேல் நிர்மாணிக்கப்படடுள்ளது.  அத்துடன் சூழல் சுற்றுலாவினை மையப்படுத்தும் இந்த ஹோட்டேலின் கட்டிடங்கள், இயற்கையினை அருகில் கொண்டுவரும் வகையில்  அமையப்பெற்றுள்ளன.

சுமார் ஏழு அறைகளை கொண்ட இந்த ஹோட்டேல், உணவகம், வரவேற்பு மண்டபம், இயற்கையான நீச்சல் தடாகம், நவீன வகையில் நீர்மாணிக்கப்பட்ட நீச்சல் தடாகம், மீன் பிடிப்பதற்கான அணைக்கட்டு ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த ஏழு அறைகளும் மலைகளுக்கு மத்தியில் பலகைகளினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இந்த அறைகளின் முன் பக்கத்தில் நின்றால் மலைகளின் இயற்கை காட்சியினை ரசிக்க முடியும். இதற்கு ஏற்ற வகையிலேயே குறித்த அறைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு மேலதிகமாக நாட்டுப்புற சைக்கிள் சவாரி, றப்பர் மற்றும் தேயிலை தோட்டங்களுக்கு நேரடியாக விஜயம் செய்து தேயிலை கொழுந்து பறித்தல் மற்றும் றப்பர் பாலெடுத்தல் ஆகியவற்றை பார்வையிடல், மரக்கறி தோட்ட விஜயம், பறவைகள் பார்வையிடல் ஆகிய வசதிகளும் இந்த ஹோட்டேலில் உள்ளன.

அத்துடன் வயல் நிலங்களுக்கு விஜயம் செய்து கிராமத்தின் இயற்கையை அறிவதுடன் கிராமங்களில் மேற்கொள்ளும் நெல் உற்பத்தி செய்முனையினை அறிவதற்கான வாய்ப்புக்களினையும் இந்த ஹோட்டேலில் தங்குபவர்கள் பெற்றுக்கொள்ள முடியும். இந்த ஹோட்டேலுக்கு விஜயம் செய்பவர்கள் வேண்டுகோள் விடுத்தால் உலகின் இயற்கையான பாரம்பரிய தளங்களில் ஒன்றான சிங்கராஜ காட்டு விஜயம் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

இவற்றுக்கு மேலதிகமாக பெட்மின்டன் மற்றும் உள்ளக விளையாட்டுக்களுக்கான வசதிகளும் இந்த ஹோட்டேலில் உள்ளன. கிராமப் புறத்தினை மையமாக கொண்ட இந்த ஹோட்டேலின் உணவகத்தில் இலங்கையின் பாரம்பரிய உணவுகளே அதிகம் பறிமாறப்படுகின்றன.

புதுமணத் தம்பதிகளின் உல்லாச விடுமுறை மற்றும் அலுவலக சுற்றுல்லாக்கள் ஆகியவற்றுக்கு இந்த ஹோட்டேல் பிரபல்யம் பெற்றதாகும். இதன் காரணமாக வார இறுதி நாட்களில் இந்த ஹோட்டேலிற்கு அதிக கிராக்கியாகும். அலுவலக சுற்றுல்லாக்களை மேற்கொள்வோரிற்கு ஏற்ற வகையில் சுமார் 1,000 ரூபாய் முதல் பல்வேறு வகையான பேக்கேஜ்கள் இந்த ஹோட்டேலினால் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பல சிறப்பம்சங்களை கொண்ட இந்த செர்னிட்டி விலேஜிற்கு நாமும் ஒருமுறை விஜயமொன்றை மேற்கொள்வதில்லையா? அந்த அடிப்படையில் வார இறுதி நாட்கள் விடுமுறை அல்லது போயா விடுமுறை ஆகியவற்றை மகிழ்ச்சிகரமான முறையில் கழிப்பதற்கு இந்த ஹோட்டேலினை தெரிவுசெய்ய முடியும்.

0114422722 அல்லது 0363368494 என்ற தொலைபேசி இலக்கம் மற்றும் serenity@sltnet.lk என்ற மின்னஞ்சல் ஆகியவற்றின் ஊடாக இந்த ஹோட்டேலை தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள முடிவதுடன் உங்கள் பதிவுகளையும் முன்கூட்டி பதிவுசெய்துகொள்ள முடியும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .