2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

கரப்பந்தாட்ட டாஷ் கேமை ஊக்குவிக்க திட்டம்

Shanmugan Murugavel   / 2021 டிசெம்பர் 27 , பி.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.யூ.எம். சனூன்

இலங்கையின் தேசிய விளையாட்டான கரப்பந்தாட்டத்தை அதற்கே உரித்தான டாஷ் கேம் பாணியிலே புத்தளம் நகரில் ஊக்குவிக்கும் முயற்சியை புத்தளம் ஸ்போர்ட்ஸ் மைன்ட் அமைப்பும், நேச்சர் விளையாட்டு கழகமும் இணைந்து ஆரம்பித்துள்ளன.

புத்தளம் நகருக்குள் கரப்பந்தாட்ட விளையாட்டுக் கலாச்சாரத்தை உருவாக்குவதும், இன்றைய இளைஞர்களை தேசிய மற்றும் சர்வதேச வீரர்களாக மாற்றுவதுமே இதன் நோக்கமாகும்.

ஓவர் கேம் விளையாட்டு என்பது போட்டிகளிலே பங்குபற்ற முடியாத ஒன்று என்பதை கருத்திற் கொண்டே டாஷ் கேம் விளையாட்டை ஊக்கமளிக்க தீர்மானித்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இதற்கென புத்தளம் புழுதிவயல் அல் பலாஹ் கரப்பந்தாட்ட அணியின் வீரரான முஹம்மது நஸ்ரின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .