Shanmugan Murugavel / 2021 ஒக்டோபர் 07 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய இராணுவம், இலங்கை இராணுவம் ஆகிய இரு தரப்பினர் மத்தியிலும் விளையாட்டு ஆர்வம், இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு “இராணுவ விளையாட்டு பரிமாற்றம்” திட்டத்தின் கீழ் எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கைக்கு வரும் 61 பேர் அடங்கிய இந்திய இராணுவக் குழாம் நட்பு ஹொக்கி, கூடைப்பந்து, கைப்பந்து மற்றும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.
இவ்வாண்டில் தொற்றுநோய் அச்சுறுத்தலால் பின்னடைவுகள் காணப்பட்டாலும் , விளையாட்டு பரிமாற்று நிகழ்வு மற்றும் விளையாட்டு துறைக்கு ஊக்குவிப்பை வழங்க வேண்டும் என்ற பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் எண்ணக்கருவுக்கமைய தேசிய மற்றும் சர்வதேச மற்றும் உள்நாட்டு தரத்தில் அதிக எண்ணிக்கையிலான விளையாட்டு மற்றும் விளையாட்டு வீரர்கள்/வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளூர் போட்டிய நிகழ்வாக மேற்படி நிகழ்வு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த காலங்களில் இந்திய இராணுவத்தினருடன் கரப்பந்து, கபடி, கூடைப்பந்து, ஹொக்கி போன்ற பல நட்பு போட்டிகளில் இலங்கை இராணுவம் பங்கேற்றிருந்தாலும், இரண்டு அதிகாரிகள் மற்றும் 59 விளையாட்டு வீரர்கள் (61) பேர் அடங்கிய பெரும் குழுவாக ஒருபோதும் பங்குபற்றியிருக்கவில்லை. இந்நிகழ்வுகள் தேசிய விளையாட்டுக்குழுவின் தலைவரான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அறிவுரைக்கமைய இராணுவ விளையாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் நளின் பண்டாரநாயக்காவால் இந்நிகழ்வு ஒருங்கிணைப்புச் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இரு நாட்டு படைகளினதும் விளையாட்டு வீரர்கள் ஹொக்கி (கொழும்பில் செயற்கை மைதானம்), பனாகொட இராணுவ விளையாட்டு கிராமத்தில் கூடைப்பந்து மற்றும் கரப்பந்து ஆகிய (எதிர்வரும் புதன்மிழமை) போட்டிகளில் பங்குபற்ற உள்ளனர். அதனையடுத்து விருது வழங்கும் நிகழ்வுகளுக்கு முன்பதாக வெள்ளிக்கிழமை (15) தொம்பேகொடை இலங்கை இராணுவ யுத்த உபகரண படையணி தலைமையக கிரிகட் மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் பங்குகொள்ளவுள்ளனர்.
வருகை தரும் இந்திய குழுவினர் இலங்கையிலிருந்து புறப்படும் முன்னதாக காலி, பின்னவல, கண்டி மற்றும் சிகிரியா ஆகிய இடங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
27 minute ago
32 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
32 minute ago
57 minute ago