Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2023 மார்ச் 26 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் ஒழுங்கமைப்பில், முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள அரச திணைக்களங்களுக்கிடையிலான அரச அதிபர் வெற்றிக் கிண்ணப் போட்டிகளில் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வெற்றிவாகை சூடியது.
மொத்த புள்ளிகளின் அடிப்படையில் இரண்டாமிடத்தை புதுக்குடியிருப்பு பிரதேச செயலக அணியும், மூன்றாமிடத்தை கரைதுறைப்பற்று பிரதேச செயலக அணியும் பெற்றன.
பெண்களுக்கான மென்பந்தாட்ட கிரிக்கெட் இறுதிப் போட்டியில் மாவட்ட செயலக அணியை ஒட்டுசுட்டான் பிரதேச செயலக அணி வென்றது.
ஆண்களுக்கான கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில், புதுக்குடியிருப்பு பிரதேச செயலக அணியை தண்ட உதை மூலம் தபால் திணைக்கள அணி வென்றது.
பெண்களுக்கான கயிறு இழுத்தல் இறுதிப் போட்டியில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக அணியை மாந்தை கிழக்கு பிரதேச செயலக அணி வென்றது.
ஆண்களுக்கான கயிறு இழுத்தல் இறுதிப் போட்டியில், கரைதுறைப்பற்று பிதேச செயலக அணியை புதுக்குடியிருப்பு பிரதேச செயலக அணி வென்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
5 hours ago
6 hours ago