2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

சம்பியனான களுவாஞ்சிக்குடி மக்ஸ்

Shanmugan Murugavel   / 2023 பெப்ரவரி 23 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அஸ்ஹர் இப்ராஹிம்

மட்டக்களப்பு மாவட்ட காக்காச்சிவட்டை விழிக்கதிர் விளையாட்டுக்  கழகம் நடாத்திய மென்பந்தாட்ட கிரிக்கெட் தொடரில் களுவாஞ்சிக்குடி மக்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.

 32 விளையாட்டுக் கழகங்கள் பங்கேற்ற எட்டு ஓவர்கள் கொண்ட இத்தொடரின் இறுதிப் போட்டியில் பிரிலியன்ட் விளையாட்டுக் கழகத்தை வென்றே மக்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மக்ஸ் 8 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 99 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு 100 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பிரிலியன்ட், 7.1 ஓவர்களில்  சகல விக்கெட்டுகளையும் இழந்து 29 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 70 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

சம்பியனான மக்ஸ் வெற்றிக் கிண்ணத்தையும் 20,000 ரூபாய் பணப்பரிசிலையும் பெற்றுக் கொண்டது.

இது இவ்வாண்டில் மக்ஸால் பெறப்பட்ட இரண்டாவது கிண்ணமாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .