2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

சம்பியனான ஜோசப்வாஸ் நகர் ஐக்கிய விளையாட்டுக் கழகம்

Shanmugan Murugavel   / 2023 மார்ச் 13 , பி.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சாதனை நாயகன் அமரர் பியூஸ்லஸ்ஸின் முதலாமாண்டு ஞாபகார்த்த கால்பந்தாட்டத் தொடரில் ஜோசப்வாஸ் நகர் ஐக்கிய விளையாட்டுக் கழகம் சம்பியனானது.

மன்னார் மாவட்ட கால்பந்தாட்ட சம்மேளனத்தின் அனுசரனையுடன் மாந்தை பிரதேச விளையாட்டு மைதானத்தில் தொடர்ச்சியாக நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியானது நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில் பனங்கட்டிக்கொட்டு சென். ஜோசப் அணியை வென்றே ஐக்கிய விளையாட்டுக் கழகம் சம்பியனானது.

இப்போட்டியின் வழமையான நேரத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்து, பெனால்டியிலேயே 7-6 என்ற ரீதியிலேயே ஐக்கிய விளையாட்டுக் கழகம் சம்பியனாயிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X