2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

மாபெரும் கடினப்பந்துப் போட்டி நாளை

Editorial   / 2019 ஒக்டோபர் 23 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

கோவில்குளம் இந்துக்கல்லூரிக்கும், புதுக்குளம் மகா வித்தியாலயத்துக்கும் இடையிலான மாபெரும் கடினப்பந்து துடுப்பாட்டபோட்டி நாளை  24 ஆம் திகதி வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

குறித்த துடுப்பாட்ட சமருக்கான முன்னேற்பாடாக வெற்றிபெறவிருக்கும் அணியினருக்கு வழங்கப்படவுள்ள வெற்றிக் கிண்ணங்கள் வாகன பவனியாக, கோவில்குளம் இந்துகல்லூரியிலிருந்து, புதுக்குளம்மகாவித்தியாலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. 

கோவில்குளம் இந்துக்கல்லூரியின் அதிபர் த.பூலோகசிங்கம் தலைமையில்,பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் பே,சுந்தராங்கனின் ஒழுங்கமைப்பில்  நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா நகரசபையின் உறுப்பினர் க.சந்திரகுலசிங்கம்,ஆகியோர் கலந்துகொண்டு வெற்றிக்கிண்ணத்தின் வாகன பவனியை ஆரம்பித்து வைத்திருந்தனர்.

கோவிற்குளம் இந்துக்கல்லூரியில் இருந்து பாண்ட் வாத்தியங்கள் முழங்க கல்லூரியின் துடுப்பாட்ட அணியினரால் வாகன பவனி ஆரம்பிக்கபட்டு குருமன்காட்டு சந்தியை அடைந்து அங்கிருந்து புதுக்குளம் மகாவித்தியாலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .