2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளன மத்தியஸ்தராக ஜப்ரான்

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 10 , பி.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அஸ்ஹர் இப்றாஹிம்

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் மத்தியஸ்தராக, கல்முனையைச் சேர்ந்த ஆதம்பாவா ஜப்ரான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் இடம்பெறும் மேற்படி தெரிவில் இவ்வாண்டுக்கான சர்வதேச மத்தியஸ்தர்கள் பட்டியலில் இலங்கையிலிருந்து ஜப்ரான் உட்பட ஆறு மத்தியஸ்தர்களின் பெயர்கள் பெயரிடப்பட்டுள்ளது.

ஒரேயொரு தமிழ்பேசும் மத்தியஸ்தராக தெரிவு செய்யப்பட்டுள்ள இவர், தேசிய ரீதியில், உள்ளூரில் இடம்பெற்ற கால்பந்தாட்ட போட்டிகளில் மத்தியஸ்தராக கடமையாற்றியுள்ளார்.

தனது 16 வயதில் 2010 ஆம் ஆண்டு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தால் நடத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்த இவர் 2012ஆம் ஆண்டு தரம் 2 மத்தியஸ்தராகவும், 2017ஆம் ஆண்டில் தரம் 1 மத்தியஸ்தராகவும் தர உயர்வு பெற்றார்.

கல்முனை சாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவரான இவர் அக்கல்லூரியிலேயே விளையாட்டுப் பயிற்றுவிப்பாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.

இவருடன் காமினி நிவோன், லோசினி கருணாந்த, துசித்த சமி, பெரேரா ஹெற்றி கமகே , கசுன் லக்மால் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .