Editorial / 2019 ஒக்டோபர் 23 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.எம்.பர்ஸான்
இலங்கை கராத்தே சம்மேளனம் கிழக்கு மாகாண ரீதியாக நடாத்திய கராத்தே போட்டியில் ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவர்கள் பங்குபற்றி தேசிய போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தெரிவித்தார்.
ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் பதினொரு மாணவர்கள் குறித்த போட்டியில் பங்குபற்றி 2 தங்கப் பதக்கங்கள் , 1 வெள்ளிப் பதக்கம், 7 வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்து தேசிய போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.
குறித்த போட்டியில் பங்குபற்றித் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கும், மாணவர்களை பயிற்றுவித்த கராத்தே பயிற்றுவிப்பாளர் மௌலவி ஏ.ஆர்.நவாஸ் காஸிமி மற்றும் மாணவர்களை தயார்படுத்திய ஆசிரியர் எம்.எல். நஜீம் ஆகியோர்களுக்கு அதிபர் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026