Editorial / 2019 ஒக்டோபர் 22 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற பளு தூக்கல் போட்டியில் தங்கப் பதக்கத்தைப் வெற்றி கொண்ட யா/மீசாலை விக்கினேஸ்வர மகா வித்தியாலய வீராங்கனை ஜெயந்திரன் யாதவியைக் கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் கேட்போர் கூடத்தில் வித்தியாலய முதல்வர் சு.சிவானந்தன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடமாகாண உடற் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் இ.ராஜசீலன், சிறப்பு விருந்தினர்களாக தென்மராட்சி உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் செல்வி.கி.பிரதீபா, தென்மராட்சி ஆசிரிய ஆலோசகர் ந.ஸ்ரீகாந்தா, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக தொலைக் கல்விப்பிரிவு சிரேஷ்ட விரிவுரையாளரும், பழைய மாணவர் சங்க செயலாளருமான க.ரஜனிகாந்தன்,
பளு தூக்கும் பயிற்றுவிப்பாளர் ஆர்.விஜயபாஸ்கர், விளையாட்டு உத்தியோகத்தர்களான சி.சதுர்சன், கே.கஜேந்திரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.இதன்போது, தங்கப் பதக்கத்தை வென்ற வீராங்கனை ஜெ.யாதவி மாலை அணிவித்து வெற்றிக் கேடயம் மற்றும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மேலும், பழைய மாணவர் சங்கத்தின் விசேட கெளரவிப்பு நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.வீராங்கனை ஜெ.யாதவி அண்மையில் பொலநறுவை றோயல் கல்லூரியில் நடைபெற்ற 17 வயதின் கீழ் 45 கிலோ எடைப்பிரிவில், 82 கிலோ எடையைத் தூக்கி தங்கப் பதங்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
23 minute ago
31 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
31 minute ago
42 minute ago