2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

பெண்களில் யாழ்ப்பாணம்; ஆண்களில் புத்தளம்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 29 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கதிரவன்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மாவட்டங்களுக்கு இடையே  நடத்திய தேசிய மட்ட கூடைப்பந்து சுற்றுப்போட்டியில் புத்தளம் மாவட்ட அணியினர் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர். திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி கூடைப்பந்தாட்ட திடலில் அண்மையில் இடம்பெற்றது.

உதவி பணிப்பாளர் விளையாட்டு தர்மகீர்த்தி உக்வத்த தலைமையில் இப்போட்டிகள் நடத்தப்பட்டது. ஆண்கள் பிரிவில் புத்தளம் மாவட்டமும், பெண்கள் பிரிவில் யாழ்ப்பாண மாவட்டமும் சம்பியனாகின.

ஆண்கள் பிரிவில் 15 மாவட்ட அணிகளும் பெண்கள் பிரிவில் 8 மாவட்ட அணிகளும் இச்சுற்றுப் போட்டியில் பங்கு கொண்டன. போட்டிகள் கிழக்கு பிராந்திய கடற்படைதள திடலிலும் நடத்தப்பட்டது.

ஆண்கள் பிரிவில், புத்தளம் மாவட்டம் இறுதிப் போட்டியில் யாழ்ப்பாண மாவட்ட அணியினை எதிர்த்து விளையாடி  64 க்கு 52 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. மூன்றாம் இடத்தினை மட்டக்களப்பு மாவட்ட அணியினர் பெற்றுக் கொண்டனர். 

பெண்கள் பிரிவில், யாழ்ப்பாண மாவட்டம் சம்பியனானதுடன், மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாமிடத்தினையும் கம்பஹா மாவட்டம் மூன்றாமிடத்தினையும் பெற்றுக் கொண்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .