R.Maheshwary / 2021 செப்டெம்பர் 14 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ஸ
பதுளை மாவட்டத்தில் அரச அலுவலகங்களில் பணியாற்றும் 30 வயதுக்கு மேற்பட்ட சகல அதிகாரிகள் மற்றும் பணியாளர்களும் இந்த மாதம் 21ஆம் திகதிக்கு முன்னர் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளதை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேப்போல் இவ்வாறு அரச அலுவலகங்களுக்கு வரும் பணியாளர்கள் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளமைக்கான அட்டையை சோதனை நடவடிக்கைகளுக்காக காண்பிக்க வேண்டும் என, இன்று (14) நடைபெற்ற பதுளை மாவட்ட கொரோனா ஒழிப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேப்போல் குறித்த அரச அலுவலகங்களுக்கு சேவைகளைப் பெற்றுக்கொள்ள வருகைத் தரும் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், தம்வசம் கொரோனா தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில், பதுளை மாவட்டத்திலுள்ள அரச அலுவலகங்களுக்கு சுற்றுநிரூபம் ஒன்றை அனுப்புமாறு, ஊவா மாகாண ஆளுநரால், மாவட்ட செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பதுளை மாவட்டத்திலுள்ள நகரங்களுக்கு வருகைத் தரும் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது அவசியம் என்பதுடன், பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இது தொடர்பான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்துக்குரிய நகரங்களில் ஆங்காங்கே எழுமாறான என்டிஜன் பரிசோதனையும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக்கலந்தரையாடலில் உரையாற்றிய ஊவா மாகாண ஆளுநர் முஸம்மில், எதிர்வரும் 21ஆம் திகதி தொடக்கம் நாட்டை திறப்பதற்கு அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ளதுடன், சுற்றுலாத்துறை போன்ற துறைகள் தொடர்பில் அதிகம் அவதானம் செலுத்தப்பட்டள்ளது.
விசேடமாக சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்ந்த எல்ல பிரதேசத்தின் சுகாதார நிலை குறித்து கண்காணிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
1 hours ago
1 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
5 hours ago
5 hours ago