2022 ஜனவரி 22, சனிக்கிழமை

வளத்தாப்பிட்டியிலும் வெடித்துச்சிதறியது

Editorial   / 2021 டிசெம்பர் 02 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வி.ரி.சகாதேவராஜா


நாட்டில் பரவலாக கேஸ் அடுப்பு வெடித்துவரும் இன்றைய சூழ்நிலையில் ,அம்பாறை மாவட்டத்திலுள்ள வளத்தாப்பிட்டியிலும் கேஸ் அடுப்பு வெடித்துச்சிதறியுள்ளது.

இச்சம்பவம், இன்று (2)காலை 9மணியளவில் இடம்பெற்றது.

வளத்தாப்பிட்டியைச்சேர்ந்த செல்லையா விஜயா என்பவரின் வீட்டில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தை கேள்வியுற்றதும் அப்பகுதிக்கான கிராமசேவை உத்தியோகத்ததர் .ரவி அங்குவிரைந்தார். சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.

தெய்வாதீனமாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. எனினும் காஸ் அடுப்பு சிதறியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணான விஜயாவிடம் கேட்டபோது:


"இக் காஸ் சிலிண்டர் ஒருமாத இடைவெளிக்குள் கொள்வனவு செய்யப்பட்டது. இன்று காலை இரண்டு அடுப்புகளைக்கொண்ட அந்த நவீனரக மாபிள் அடுப்பில் ஒன்றில் தண்ணீரைக்கொதிக்கவைக்கு முகமாக சட்டியில் தண்ணீரை வைத்துவிட்டுவேலைபார்த்தேன்.

9மணியளவில் திடீரென படாரென வெடிப்புச்சத்தம் கேட்டது. சமையலறைக்குள் பயத்துடன் ஓடிச்சென்றுபார்த்ததும் தண்ணீர்பானை வையாத மற்ற அடுப்பு வெடித்துச்சிதறியிருந்தது. "என்றார்.

சம்மாந்துறை பெருநிலப்பிரப்பில் இடம்பெற்ற முதலாவது கேஸ் அடுப்பு வெடிப்புச்சம்பவம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X