Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 ஜூலை 27 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன், நடராசா கிருஸ்ணகுமார், எஸ்.றொசேரியன் லெம்பேட், செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்
இராணுவ பிரசன்னம் மற்றும் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்களின் மத்தியிலும், கறுப்பு ஜுலை நினைவேந்தல் நிகழ்வுகள், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில்,இன்று (27) காலை 9 மணிக்கு நடைபெற்றன.
தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில், வெலிக்கடை சிறையில் 1983ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 53 அரசியல் கைதிகளுக்கும் அவ்வேளை படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்குமாக இரண்டு நிமிடங்கள் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
'சுகாதார நடைமுறைகளுக்கு முழுமையாக மதிப்பளித்து நினைவேந்தலை நாம் செய்ய முற்பட்ட போது காலையிலேயே பொலிசார் எமது அலுவலகம் முன்பாக நோட்டமிடுகின்றனர்.
'அதுபோன்று இராணுவப் புலனாய்வாளர்கள் அலுவலக வாசலில் காத்து நிற்கின்றனர்' என, தவிசாளர் கூறினார்.
இதை அடுத்து, பல உறுப்பினர்கள் அச்சம் காரணமாக இந்நிகழ்வில் பங்கேற்கவில்லை.
இதேவேளை, மன்னார், முல்லைத்தீவு மாவட்ட தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) அலுவலகங்களிலும், இந்த நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
39 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
42 minute ago