2023 ஜூன் 07, புதன்கிழமை

இரத்தினபுரியில் இரு பெண்கள் இரண்டு கும்பல்களால் கொலை

Freelancer   / 2023 மார்ச் 29 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

உமாமகேஸ்வரி

இரத்தினபுரி பொலிஸ் பகுதியிலுள்ள பட்டுகெதர எனுமிடத்தில்  வீடொன்றில் தனியாக வசித்து வந்த இரு வயோதிப் பெண்களில் ஒருவரை இனந்தெரியாத கும்பலொன்று நேற்று செவ்வாய்க்கிழமை (28) அதிகாலை அவ்வீட்டுக்குள் உட்புகுந்து கூரிய ஆயுதமொன்றினால் வெட்டி கொலை செய்து உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீட்டில் உள்ள பொருட்களை கொள்ளையிடும் நோக்கத்தோடு உட்புகுந்த இனந்தெரியாத கும்பல் இவ்வீட்டில் பொருட்களை தேடி அலைந்த போது சத்தம் கேட்டு எழும்பிய வயோதிய பெண்ணை  கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்து தப்பியோடி விட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்

அதன் பின்னர் சத்தம் கேட்டு எழும்பிய மற்றைய வயோதிப பெண் அயலவர்களின் உதவியுடன் கள்வர்களை பிடிக்க முயற்சி செய்த போதிலும் அது முடியாது போகவே இது குறித்து இரத்தினபுரி பொலிஸாருக்கு தகவல்களை வழங்கியுள்ளனர்.

ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் இதுவரை சந்தேக நபர்கள் யாரையும் கைது செய்யப்படவில்லை.

இது இவ்வாறிருக்க இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள கிரிஎல்ல பொலிஸ் பகுதியில் இளம் பெண்ணொருவர் வேலைக்குச் செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்ற 20 நிமிடங்களில் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்து, சடலத்தை பாலத்திற்கடியில் போட்டு விட்டு சென்றுள்ளனர். இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் சந்தேக நபர்களை இதுவரை கைது செய்யவில்லை.

இவ்விரு சம்பவங்களும் இரண்டு கும்பல்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .