Freelancer / 2023 ஜனவரி 27 , மு.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு, கரைதுறைபற்றின் அம்பலவன்பொக்கணை ஆரம்ப சுகாதார நிலையத்தை வைத்தியசாலையாக தரமுயர்த்துமாறு, இக்கிராம பொது அமைப்புகள் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் ஆகிய கிராமங்களின் மக்கள், முல்லைத்தீவு பொது வைத்தியசாலை, புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலை என்பவற்றுக்குச் சென்று வருவதில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். இது தொடர்பாக, கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர் உட்பட சுகாதார அதிகாரிகளுக்கும் மனுக்கள் கையளிக்கப்பட்டன.
அம்பலவன்பொக்கணை ஆரம்ப சுகாதார நிலையத்தை வைத்தியசாலையாக தரமுயர்த்துவதன் மூலம், கிராமத்தில் நிரந்தரமாக வைத்தியர் தங்கி நிற்கக் கூடிய நிலைமை ஏற்படும்.
வைத்தியசாலையாக ஆரம்ப சுகாதார நிலையம் தரமுயர்த்தப்படும் வரை, வாரத்தில் ஒரு முறை கிராமத்துக்கான நடமாடும் வைத்திய சேவையை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தற்போது மாதத்தில் ஒரு தடவை பெண்களுக்கான கருவள சிகிச்சை மட்டும் நடைபெறும் நிலையில், எமது கிராமத்தில் வைத்தியசாலையின் அவசியம் உணரப்படுவதன் காரணமாக, ஆரம்ப சுகாதார நிலையத்தை வைத்தியசாலையாக மாற்றுங்கள் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

5 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
7 hours ago