2021 ஒக்டோபர் 21, வியாழக்கிழமை

கினிகத்தேனை நகர வர்த்தகர்களுக்கு என்டிஜன் பரிசோதனை

R.Maheshwary   / 2021 செப்டெம்பர் 17 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரா.யோகேசன்

கினிகத்தேனை நகரில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் கடமையாற்றும் உரிமையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும், கினிகத்தேனை பொது சுகாதார அதிகாரிகளினால்  இன்று என்டிஜன் பரிசோதனை   மேற்கொள்ளப்பட்டது.

 தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள இவ்வேளையில், அத்தியாவசிய தேவைகளுக்காக நகரங்களின் சில வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளதால், கினிகத்தேனை நகருக்கு அதிகளவான மக்கள் வந்து செல்கின்றனர். எனவே இரு தரப்பனரின் பாதுகாப்பு கருதி இவ்வாறு என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக கினிகத்தேனை பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

தவிரவும் எதிர்வரும் தினங்களில் நாடு திறக்கப்படுமாக இருந்தால், அதற்கான ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் ஆரம்ப கட்ட நடவடிக்கையாகவும் இது மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்கள்  மேலும் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X