2023 ஜூன் 01, வியாழக்கிழமை

குற்றமாகவே காண்கின்றேன்

Freelancer   / 2023 மார்ச் 20 , பி.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூனாகலை, கபரகலை தோட்டத்தில் மண்சரிவுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு பொறுப்பு கூற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் ​தெரிவித்தார்.

சிங்கப்பூரில் தற்சமயம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பின் - ஆசியா பசுபிக் (ITUC-AP )பிராந்திய மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி  வடிவேல் சுரேஷ் எம்.பி பங்கேற்றுள்ளார்.

இம் மாநாட்டில் பெருந்தோட்ட மலையக மக்களின் எதிர்கால நலன்புரி வேலைத் திட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்நிலையில், மண்சரிவு தொடர்பில் அங்கிருந்து கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சீரற்ற காலநிலை மாற்றத்தினால் பெருமளவு பாதிப்புக்கு உள்ளாகுவது பெருந்தோட்ட மலையக பகுதிகளே. இதனை நன்கு அறிந்தும் , மண்சரிவு தொடர்பில்  அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் ஏன் முன்னறிவித்தல் விடுக்கப்படவில்லை? இதனை பாரியதொரு  குற்றமாகவே நான் காண்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.

உடனடியாக மீண்டும் அப்பிரதேசத்தை மீள் பரிசோதனை செய்து அருகில் உள்ள பிரதேசங்கள் தொடர்பிலும் ஆராய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை மேற்கொள்வதோடு அம் மக்களைப்  பாதுகாப்பான இடங்களில்  மீள்குடி அமர்த்தக்கூடிய நடவடிக்கைகளையும் ஏற்படுத்தித் தரப்பட வேண்டும் என ஜனாதிபதிக்கு மின்னஞ்சல் மூலம் அறிவித்துள்ளேன் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .