2023 ஒக்டோபர் 03, செவ்வாய்க்கிழமை

ஹிங்குரானை குழுவால் இறக்காமம் ஹோட்டல் தாக்குதல்

Freelancer   / 2023 ஏப்ரல் 04 , பி.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை நகருக்கு அண்மையில் அமைந்துள்ள இறக்காமம், வரிப்பதான்சேனையிலுள்ள ‘சலாமத்’ ஹோட்டல், குழுவொன்றால் தாக்கி சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

ஹிங்குரானை பகுதியைச் சேர்ந்த எட்டு பேர் கொண்ட குழு, நேற்று முன்தினம் (03) இரவு, ஹோட்டலில் உள்ள விலை மதிப்புள்ள பொருட்களைத் தாக்கி சேதம் விளைவித்துள்ளது. இதைத் தடுத்து நிறுத்த முயன்ற ஹோட்டல் உரிமையாளரும் தாக்குதலுக்கு உள்ளானார்.

அதைத் தொடர்ந்து ஹோட்டலின் உரிமையாளர் உட்பட தாக்கிய குழுவைச் சேர்ந்த இருவரும் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலதிக விசாரணைகளை
இறக்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .