Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2023 ஜூன் 07, புதன்கிழமை
Ilango Bharathy / 2023 மார்ச் 23 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
தந்தையின் சடலத்திற்கு அருகில் நின்று இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள பெருவங்கூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ‘ராஜேந்திரன்‘. இவரது மனைவி அய்யம்மாள் .இவர்களது மகனான பிரவீன் சொர்ணமால்யா என்ற பெண்ணைக் காதலித்து வந்துள்ளார்.
இதனையடுத்து தனது மகனின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக சொர்ணமால்யாவின் வீட்டிற்குச் சென்று அவரது பெற்றோருடன் பேசி ‘ராஜேந்திரன், திருமணத்துக்கு சம்மதம் பெற்றுவந்துள்ளார்.
இந்நிலையில் ‘ராஜேந்திரனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்படவே தான் இறப்பதற்கு முன்னர் தனது மகனுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் வருகின்ற 27 ஆம் திகதி திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து தனது தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றும் விதமாக தனது உறவினர்களின் சம்மதத்துடன் கனத்த இதயத்தோடு ராஜேந்திரனின் சடலத்துக்கு முன்பாக பிரவீன் தனது காதலியைத் திருமணம் செய்தார்.
இச்சம்பவமானது அப்பகுதி மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
38 minute ago
45 minute ago
1 hours ago