2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

முக்கியப் பொருள்களை பதுக்கிய வர்த்தகர்கள்

R.Maheshwary   / 2021 ஒக்டோபர் 10 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ரஞ்சித் ராஜபக்ஸ

சமையல் எரிவாயு மற்றும் கோதுமை மா என்பவற்றின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக கிடைத்த தகவலுக்கமைய, ஹட்டன் உள்ளிட்ட மலையகத்தின் பிரதான நகரங்கள் பலவற்றில் சமையல் எரிவாயு விற்பனை முகவர் நிலையங்கள் இன்றைய தினம் (10) மூடப்பட்டிருந்தன.

தமது விற்பனை நிலையங்களுக்கு கிடைக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை நகரிலுள்ள ஹோட்டல்களுக்கு வழங்கியதால், நுகர்வோருக்கு வழங்குவதற்கு தம்வசம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இல்லை என்றும் சமையல் எரிவாயு விற்பனை முகவர் நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் விலை அதிகரிக்கப்படவுள்ளதால் சிலிண்டர்களை விற்பனை நிலைய உரிமையாளர்கள் மறைத்து வைத்திருப்பதாக நுகர்வோர் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

இதேவேளை நாளையிலிருந்து (11) கோதுமைமாவின் விலை அதிகரிக்கப்படும் என கோதுமை மா உற்பத்தி நிறுவனங்கள் அறிவித்துள்ளதால், மலையகத்தின் பெரும்பாலான நகரங்களின் வர்த்தக நிலையங்களில் கோதுமைமா பதுக்கப்பட்டுள்ளதுடன், குறித்த வர்த்தகர்கள் பேக்கரிகளுக்கு மாத்திரம் கோதுமைமாவை விநியோகித்துள்ளதாகவும் நுகர்வோர் குற்றஞ்சுமத்துகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .